வருகை
நினைவுகளில் நித்தம் இருந்தாலும்
நிதர்சனத்தில் என் வருகை நிகழ்ந்தபோது
தோட்டம் இறந்து கிடந்தது!
தெரிந்த முகங்களைத் தேடவேண்டியிருந்தது
தென்பட்டவைகளில் சுயத்தின் சாயல்
முகமூடிகள் என்னவோ அழகாய்தானிருந்தன
முழுதாய் இரசிக்கத்தான் முடியவில்லை!
தாய் சுரந்து அகம் வளர்ந்தது
இரப்பர் சுரந்து புறம் வளர்த்தது
மனம் இலயிக்கவில்லை ஏனோ
இரப்பர் மனிதங்களை புதைத்துத் துளிர்த்த
செம்பனைத் தழுவல்களில்!
மெல்லிய தூறலின்போது
நாசி வழி உணரமுடிந்தது
மண்ணும் மரணித்துக்கொண்டிருப்பதை!
அகோரமாய் ஓலமிட்டு பின்
அமைதிகண்டது மனம்
மீண்டும் இனி நிகழக்கூடும்
திவச தினங்களில் மட்டும்
தோட்டத்திற்கான என் வருகை!
(திசைகள், அக்டோபர் 2004)
1 Comments:
வாங்க சிவா... வலைப்பூவில் ஒரு புதிய மலேசிய முகத்தைப் பார்ப்பதில் - மலேசிய இலக்கிய உலகோடு பரிட்சயமுள்ளவன் என்ற முறையில் - மிக மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள்
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home