இன்னமும்....
அம்மா மடிக்கும்
நீள்சதுர வடிவிலான
வெற்றிலை அளவில்
ஒரு முட்டைத்துண்டு
சோற்றுக்குவியலில்
தேடிப்பார்த்தால் கிடைக்கும்
ஒன்றிரண்டு நெத்திலிகள்
கொஞ்சம் காரம்
மழைநனைத்த கட்டிப்பால் நாற்றம்
நிறைய கொசுக்கடி....
அந்த இருபது காசு ‘நாசி லெமாக்‘
இன்னமும் திருடிக்கொள்கிறது
குளிர்சாதன அறையில்
சுடச்சுட மனைவி பரிமாறும்
உணவின் சுவையை!
1 Comments:
புலால்களின் அணிவகுப்பில் என்னவள் கை..
வாய்க்கு மட்டும் விடைசொல்லி போவது ஏனோ..
அம்மா.. உனது அந்த 'நாசி லெமாக்'..
உள்ளே இன்னும் இருப்பதாலோ..
இனிய கவிதை வாழ்த்துக்கள்..
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home